விஜய் ஆண்டனி பர்த்டேக்கு சூப்பர் ட்ரீட்: மிரட்டலா வெளியான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை: சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இன்று 46வது பிறந்தநாள்.

சுக்ரன் படத்தின் மூலம் மியூசிக் டைரக்டராக திரைப் பயணத்தை தொடர்ந்த விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கொலை, ரத்தம், அக்னிச் சிறகுகள், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன.

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்பமே அமர்க்களம்

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான 'சுக்ரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. 'சப்போஸ் உன்ன காதலிக்க', 'சாத்திக்கடி போத்திக்கடி', 'உச்சி முதல் பாதம் வரை' என அனைத்துப் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

நாக்கு முக்க

நாக்கு முக்க

சுக்ரனை தொடர்ந்து 'டிஷ்யூம்' படத்தின் பாடல்களையும் அதிரிபுதிரியாக ஹிட் கொடுத்தார் விஜய் ஆண்டனி. அதேபோல், 'நான் அவனில்லை' படத்தின் பாடல்களும் விஜய் ஆண்டனிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில், 'காதலில் விழுந்தேன்' படத்தில் இவர் போட்ட 'நாக்கு முக்க' பாடல், சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் ஆட்டம் போட்டு கொண்டாட வைத்தது, இப்பாடல், கான்ஸ் திரைப்பட விருது விழா வரை சென்று, 'கான்ஸ் கோல்டன் லயன்' விருதையும் தட்டித் தூக்கியது.

மியூசிக் டூ ஆக்டிங்

மியூசிக் டூ ஆக்டிங்

விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் மியூசிக் டைரக்டராக வலம் வந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் ஹீரோ அவதாரமும் எடுக்கத் தவறவில்லை. முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து, வசூலில் மாஸ் காட்டிய விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து 'சலீம்', 'பிச்சைக்காரன்' படங்களை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கி கெத்து காட்டினார். அதிலும், பிச்சைக்காரன் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது.

ஆக்டிங் டூ டைரக்‌ஷன்

ஆக்டிங் டூ டைரக்‌ஷன்

விஜய் ஆண்டனியின் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்க, நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. இதனால், தற்போது இசையமைப்பதை விடவும், நடிப்பதில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. இதுமட்டும் போதாது என நினைத்தாரோ என்னவோ?, இப்போது 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கி வருகிறார். அதோடு, படங்கள் தயாரிப்பதிலும் விஜய் ஆண்டனி ஈடுபட்டு வருகிறார்.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கொலை, அக்னிச் சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்த நிலையில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரத்தம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கருஞ்சட்டையுடன் கையில் பெரியார் வைத்திருக்கும் தடியோடு தோற்றமளிக்கிறார் விஜய் ஆண்டனி. அவரின் பின்னால் "ஏன் மடமை என்று ஊர் மனதை வென்று போர் புரியவே வந்தான் ஒருவனே" என்ற வாசகம் உள்ளது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Legend Saravana நிஜ வாழ்க்கை | Untold story of Saravanan Arul *Celebrity | Filmibeat Tamil
பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து

பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ரத்தம் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு, ரத்தம் படத்தின் முதல் தோற்றத்தையும் பாராட்டியுள்ள அவர்கள், படம் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X