திரைத் துளி
கேரளாவில் நாட்டு வைத்தியம் செய்து கொண்டு புத்துணர்வுடன் சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள பூமுள்ளி என்ற இடத்தில் ராஜ வைத்தியம் எனப்படும் இயற்கை வைத்தியசாலை உள்ளது. இங்குஉடல் மெருகு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ஆலோசனையின் பேரில் நடிகர் ரஜினி காந்த் இங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார்.மொத்தம் 12 நாட்களுக்கு அவருக்கு சிகிச்சை நடந்தது. ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவும் உடன் வந்து சிகிச்சை பெற்றார்.
திங்கள்கிழமை காலை சிகிச்சை முடிந்து ரஜினி காந்த், ஆதிசங்கரர் பிறந்த காலடி என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு ஆதி சங்கரர்கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் மாலையில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டபோது, நல்ல புத்துணர்வுடன் திரும்பியுள்ளேன். புதிய படம்எதுவும் இன்னும் முடிவாகவில்லை. திரைக்கதை பக்காவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எனவே நல்ல திரைக்கதைஅமைந்தால் உடனடியாக படத்தைத் துவக்கி விடலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வீடு திரும்பினார்.


Click it and Unblock the Notifications











