சூப்பர்மேன் நாயகி காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

By Vignesh Selvaraj

பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர், 1968-ல் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். 1978-ம் ஆண்டு வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் கதாநாயகியாக நடித்து உலகம் முழுக்க பிரபலமானார். இவர் 'சூப்பர்மேன்' படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கட் கிட்டரின் நடிப்பில் கடைசியாக, 'தி நெய்பர்ஹுட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் மார்கட் கிட்டரின் கதாபாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

Superman actress margot kidder passes away

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று மார்கட் கிட்டர் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு, மன அழுத்தத்தாலும் அவதிப்பட்டு வந்தாராம்.

கடைசி காலம் வரை ஹாலிவுட் திரைப்பட உலகில் நடித்துவந்த மார்கட் கிட்டரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும், உலகம் முழுக்க இருக்கும் சூப்பர்மேன் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X