twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தாய் அய்யா.. வந்தாய் அய்யா.. வாழ்வை மீட்டு தந்தாய் அய்யா.. ரியல் சூப்பர் மேனாக மாறிய சோனு சூட்!

    |

    சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட், ரியல் லைஃபில் சூப்பர்மேனாகவே மாறியுள்ளார்.

    Recommended Video

    Thalapathy Vijay Effort, நிஜதிலும் வேலாயுதம் தான் | Real Hero Sonu Sood

    லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் உன்னத பணியை செய்து வருகிறார் சோனு சூட்.

    முதலில் பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிய சோனு சூட், இப்போ 100 பேருந்துகளில் தொழிலாளர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

    கால்நடையாக நடக்கும் பரிதாபம்

    கால்நடையாக நடக்கும் பரிதாபம்

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவும், சைக்கிளில் துணி மூட்டைகளை கட்டிக் கொண்டும் பயணித்து வரும் பரிதாப நிலையை நாள்தோறும் செய்திகளில் காண முடிகிறது. சமீபத்தில் நடைபெற்ற சரக்கு லாரி விபத்தில் பல தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானது நாட்டையே உலுக்கியது.

    வெளி மாநிலங்களுக்கு

    வெளி மாநிலங்களுக்கு

    இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக அரசுகளின் அனுமதியை பெற்ற நடிகர் சோனு சூட், மும்பையில் சிக்கித் தவிக்கும் கர்நாடக மாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டில் இறங்கியுள்ளார். முதலில் 10 பேருந்துகளில் சுமார் 350 பேரை அனுப்பி வைத்திருந்த நிலையில், தொடர்ந்து தனது சேவையை செய்து வருகிறார்.

    100 பஸ்

    100 பஸ்

    கடந்த மே 11ம் தேதி வரை நடிகர் சோனு சூட் தனது நண்பர்களுடன் இணைந்து 21 பேருந்துகளில் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், தனது சொந்த செலவில் அனுப்பி வைத்து வருகிறார். பேருந்துகளில் செல்லும் பயணியர்களிடம் ஒரு பைசா கூட வாங்காத அவரது நல்ல மனசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பத்து நாட்களில்

    பத்து நாட்களில்

    நேற்று மேலும், 10 பேருந்துகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். இன்னும் 10 நாட்களில் மொத்தமாக 100 பேருந்துகள் மும்பையில் இருந்து கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு பயணமாகும் என்பதை தெரிவித்துள்ளார். வீட்டில் ஏசியில் அமர்ந்து கொண்டு ட்வீட் போட்டுக் கொண்டிருக்க தான் நினைக்கவில்லை என சமீபத்தில் கூறிய சோனு சூட் இறங்கி வேலை செய்து வருவது பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் சபாஷ் போட வைத்திருக்கிறது.

    சொந்த செலவில்

    சொந்த செலவில்

    நடிகர் சோனு சூட் தனது நண்பர்கள் கர் பேஜா, நீத்தி கோயல் உள்ளிட்டோருடன் இணைந்து இந்த பணியை செய்து வருகிறார். 800 கி.மீ., வரையிலான பயணத்துக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாயும், 1,600 முதல் 2000கி.மீ வரை செல்லும் பயணத்துக்கு 1.8 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். அனைவரையும் சோஷியல் டிஸ்டன்ஸிங் முறைப்படி அமரவைத்தே கொண்டு செல்கின்றனர்.

    சூப்பர் மேன்

    சூப்பர் மேன்

    நடிகர் சோனு சூட்டை இதுவரை வில்லனாக பார்த்து வந்த பாலிவுட் ரசிகர்கள், தற்போது ரியல் சூப்பர் ஹீரோவாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சோனு சூட். தன்னலமற்ற அவரது சேவையை பாராட்டி #SonuSood என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Actor Sonu Sood arrange buses to transport migrant workers to their own states. He arranged 30 more buses still now and sends more than 800 migrants to their door steps.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X