சூப்பர்ஸ்டார் டைரக்டர் அட்லி.. பிகிலை பார்த்து மெர்சலான கரண் ஜோஹர்!

இந்த தீபாவளி பண்டிகைக்கான சிறந்த படம் பிகில் என்றும் அட்லி சூப்பர்ஸ்டார் இயக்குநர் என்றும் பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாராட்டியுள்ளார்.

மும்பை: விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 180 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது.

உலகமெங்கும் வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு, இதற்குமுன் வெளியான விஜய்யின் படங்களை விட அதிகளவில் வசூல் குவிந்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பிகில் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தீபாவளி சரவெடி

தீபாவளி சரவெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள விஜய்யின் பிகில் திரைப்படம், இந்தியாவை தாண்டி உலகளவில் இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கிங்

தீபாவளியை முன்னிட்டு பாலிவுட்டில் வெளியான அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் மற்றும் டாப்ஸி, புமி பெட்னேகர் நடிப்பில் வெளியான சாந்த் கி ஆன்க் திரைப்படங்களின் வசூலை விட விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அதிக வசூலை ஈட்டியுள்ளது. இதன்மூலமாக நடிகர் விஜய் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் இயக்குநர்

சூப்பர்ஸ்டார் இயக்குநர்

இந்நிலையில், பிகில் திரைப்படத்தை பார்த்துள்ள பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர், இந்த பண்டிகை தின கொண்டாட்டத்திற்கான சிறந்த படம் பிகில் என்றும், இது ஒரு பக்காவான ரோலர் கோஸ்டர் ரைடு என்றும் பாராட்டியுள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் டாப் ஃபார்ம் ரசிகர்களை காட்சிக்கு காட்சி விசில் போட வைக்கிறது என்றும் இயக்குநர் அட்லி சூப்பர்ஸ்டார் இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் என்றும் பாராட்டுக்களை குவித்துள்ளார்.

புள்ளிங்கோ நன்றி

புள்ளிங்கோ நன்றி

கரண் ஜோஹர் தற்போது பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டுக்கு கீழே, தளபதி விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியளவில் பிகில் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கரண்ஜோஹர் இதற்குமுன் தனுஷின் அசுரன் திரைப்படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X