ரஜினியின் சிறப்பான தரமான சம்பவம் பேட்ட ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படம் திரைக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

போன பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசத்துடன் ரிலீசான ரஜினியின் பேட்ட படமும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த ஆண்டு பொங்கலுக்கும் ரஜினியின் தர்பார் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், பேட்ட படம் ரிலீசாகி ஒரு வருஷம் ஆகியுள்ளதை #1YearOfPetta என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட

எந்திரன் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தை கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பேட்ட படம் கடந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்தது.

பேட்ட இயக்குநர்

பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில், தலைவர் ரஜினியின் பேட்ட பட அனுபவங்களை படத்தில் பணிபுரிந்த யாராலும் மறக்க முடியாது, தலைவர் ரஜினிகாந்துக்கும், சன் பிக்சர்ஸ்க்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

காசி

பேட்ட படம் கடந்த வருடம் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூலை பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்தது மறக்க முடியாது என சென்னையில் உள்ள காசி தியேட்டர் நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எந்த படம்

ரஜினி ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுத்து ரஜினிஃபைட் ஆக்கிய படம் பேட்ட படமா தர்பார் படமா என ரஜினி ரசிகர்கள் கேள்வி கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.

கெடா மீசை

பேட்ட படத்தின் பிளாஷ்பேக் சீனில் கெடா மீசை லுக்கில் பேட்ட வேலனாக சூப்பர்ஸ்டாரை மாஸாக காட்டிய கார்த்திக் சுப்புராஜுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம்

2K கிட்ஸுக்கு ரஜினினா யாருன்னு காட்டுன படம் தான் பேட்ட என்றும், தரமான சம்பவம் என்றும் ரசிகர்கள் ட்வீட் போட்டு ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சிறந்த படம்

2010 முதல் 2019 வரை வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களில் பேட்ட படம் தான் சிறப்பான படம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மாளவிகா

பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும், சசிகுமாருக்கு ஜோடியாகவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை மாளவிகா மோகனன் நிரூபித்துள்ளார் என்று இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

வின்டேஜ் ஸ்டைல்

எங்க தலைவரோட அந்த வின்டேஜ் ஸ்டைல், வாக், ஃபைட், டான்ஸ் மற்றும் மாஸ் டயலாக் டெலிவரிலாம் பிக் ஸ்க்ரீன்ல பார்க்க முடியாதோன்னு நெனச்சிட்டு இருந்த நேரத்துல தரமான சம்பவம் பண்ணிட்டாரு என இந்த ரஜினி ரசிகர் நெகிழ்ச்சி ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X