பிரேமம் இயக்குநரின் ‘கோல்ட்‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு..குஷியில் ரிசிகர்கள்!

சென்னை : நயன்தாரா மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்துள்ள கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தில் பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன், பிருத்விராஜின் அம்மாவாக நடித்துள்ளார். மேலும் பிருத்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

கோல்ட் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பிரேமம்

பிரேமம்

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். 2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த பிரேமம் படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

கோல்ட்

கோல்ட்

பிரேமம், நேரம் ஆகிய படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு 'கோல்ட்' படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோஷ் என்ற கதாபாத்திரத்திலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சுமங்கலி உன்னிகிருஷ்ணன் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

சொந்த தயாரிப்பில்

சொந்த தயாரிப்பில்

கோல்ட் படத்தை பிருத்விராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜ்மல் அமீர், செம்பன் வினோத் மல்லிகா சுகுமாரன், ஷம்மி திலகன், வினய் கோட்டை, புபுராஜ், லாலு அலெக்ஸ், சைஜு குருப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Recommended Video

பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat
ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில் கோல்ட் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி அதாவது ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் Gold is melting this Onam என பதிவிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X