“தலைவர் 170“… நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே… இயக்குனர் யார் தெரியுமா ?

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அவரை வைத்து இளம் இயக்குநர்கள் மாஸ் படங்களை கொடுத்து வருகின்றனர். கமர்ஷியல் அவதாரங்களை விட்டுவிட்டு தற்போது சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து வருகிறார்.

ரஜினி நடிக்கும் 170 திரைப்படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த அண்ணாத்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் சிறப்பான வசூலை குவித்தது. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

பல இயக்குநர்களுடன்

பல இயக்குநர்களுடன்

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ் என பல இயக்குனர்களின் பெயர் அடிபட்ட வண்ணமே இருந்தன.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

இதையடுத்து, ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. பீஸ்ட் படத்தின் ரிலீஸில் பிசியாக இருக்கும் நெல்சன், அதையடுத்து தலைவரை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

Recommended Video

கடவுள் வழிகாட்டுகிறார்... எதை சொல்கிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா - வீடியோ
தலைவர் 170

தலைவர் 170

இந்நிலையில் தலைவர் 170வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், போனிக்கபூர் மற்றும் ராகுல் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அருண்ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி வருகிறார். தலைவர் 169 மற்றும் 170 பட அறிவிப்பால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X