Vettaiyan Box Office Day 11: வார இறுதியில் வேட்டையனின் நிலைமை என்ன தெரியுமா? பில்டப் எடுபட்டுச்சா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆன படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படமான வேட்டையனை, ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு இருந்து வந்தது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்ததால் படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது 20ஆம் தேதியுடன் 11 நாட்கள் ஆகின்றது. இந்த 11 நாட்களில் படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படமான வேட்டையனில் அவருடன் இணைந்து, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்னதாக, படக்குழு வெளியிட்ட மனசிலாயோ பாடல் அனைவரது மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தப் பாடல் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வேட்டையன் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக படத்தின் இயக்குநர் மீது தனி நம்பிக்கையே இருந்தது. மக்களுக்கு கருத்து சொல்லக்கூடிய நல்ல படத்தினை இவர் கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. அதேபோல் படத்தில் என்கவுன்ட்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, நீட் தேர்வுக்கு கோச்சிங் தருகின்றோம் என கொள்ளை அடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் மிகவும் ஆழமான கருத்தினை இந்தப் படம் பேசியதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
லைகா: படக்குழுவும் நேரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்று கேக் வெட்டி கொண்டாடினர். இந்த சந்திப்பின்போது லைகா நிறுவனத்துடன் சூப்பர் ஸ்டார் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகின்றது. இசை வெளியீட்டு விழாவின்போது ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் பேசுகையில், லைகா நிறுவனத்தை தனது சொந்த நிறுவனம் என குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே 2.0, லால் சலாம், வேட்டையன் என லைகா நிறுவனம் சூப்பர் ஸ்டாருக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளது.

பாதிப்பு: வேட்டையன் படத்தின் வசூல் என்பது தற்போது வசூலித்ததை விடவும் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என திரைத்துறையில் பேச்சு அடிபடுகின்றது. குறிப்பாக, வேட்டையன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் நடந்து கொண்டதற்கு காரணமே ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுதான் காரணம் என கூறப்பட்டது. மேலும் கோட் படத்தின் ரிலீஸின்போது, ரஜினிகாந்த் ரசிகர்கள் கோட் படத்தின் வசூலுக்கு எதிராக நடந்து கொண்டதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.
வசூல்: படம் வெளியாகி நேற்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. இந்த 11 நாளில் படத்தின் வசூல் மிகவும் சுமாராகவே உள்ளது. குறிப்பாக வார நாட்களில் படத்தின் வசூல் ஓரளவுக்கு மட்டுமே இருந்தாலும், வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மிகவும் சுமாராகவே உள்ளது. அதாவது இந்தியா முழுவதும் (பெரும்பாலும் தமிழ்நாடு) வார இறுதி நாளான நேற்று ரூபாய் 5 கோடிகள் வரை மட்டுமே படம் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மொத்தத்தில் 11 நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 315 கோடிகளில் இருந்து 320 கோடிகள் வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. தீபாவளி வரை பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாததால், படத்தின் வசூல் கணிசமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











