மொத்தமா சரிந்த வசூல் வேட்டை.. வேட்டையன் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன, ஜெயிலர் படம் கமெர்ஷியலாக நல்ல வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீதும் தனி எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டும் இல்லாமல், ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 650 கோடிகள் வசூல் செய்தது. இதனால் வேட்டையன் படம் அதைவிட அதிக அளவு வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் படத்தின் பெயரே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பைக் கூட்டியது.
படம் குறித்த அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் பேசிய " குறி வெச்சா இரை விழனும்" எனும் வசனம் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது அக்டோபர் 22ஆம் தேதியுடன் 13 நாட்கள் ஆகின்ற நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படமான வேட்டையனில் அவருடன் இணைந்து, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்னதாக, படக்குழு வெளியிட்ட மனசிலாயோ பாடல் அனைவரது மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தப் பாடல் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக அனிருத் வேற லெவலில் இசை அமைத்து அசத்தியிருந்தார். குறிப்பாக பின்னணி இசையில் மொரட்டுத்தனமாக அமைத்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு மாஸ் காட்சிகளுக்கும் அனிருத்தின் பின்னணி இசையையும் தியேட்டரில் பார்க்கும்போது பலருக்கும் உடல் சிலிர்த்தனது. இதுமட்டும் இல்லாமல், இசை வெளியீட்டு விழாவில் நரம்பு புடைக்க பாடியிருந்தார். இதனால் வேட்டையன் படத்திற்கு என்ன மாதிரி இசை அமைக்கப்போகின்றார் என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்பட்டது. அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்யும் வகையில் அனிருத்தின் இசை அட்டகாசமாக அமைந்தது. குறிப்பாக மனசிலாயோ பாடல் உலகம் முழுவதும் பாப்புலர் ஆனது.

மழை: படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரப்புர்வமாக அறிவித்தது. அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சந்தித்த கனமழை, அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என, படம் பார்க்க யாருமே தியேட்டருக்கு வரவில்லை. இதனால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மிகக் குறைந்த அளவிலான ரசிகர்களைக் கொண்டு படம் திரையிடப்பட்டது.

பாதிப்பு: வேட்டையன் படத்தின் வசூல் என்பது தற்போது வசூலித்ததை விடவும் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என திரைத்துறையில் பேச்சு அடிபடுகின்றது. குறிப்பாக, வேட்டையன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் நடந்து கொண்டதற்கு காரணமே ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுதான் காரணம் என கூறப்பட்டது. மேலும் கோட் படத்தின் ரிலீஸின்போது, ரஜினிகாந்த் ரசிகர்கள் கோட் படத்தின் வசூலுக்கு எதிராக நடந்து கொண்டதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.
வசூல்: வேட்டையனைப் பொறுத்தவரை முதல் நான்கு நாட்கள் வசூலுக்குப் பின்னரான பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது அக்டோபர் 22ஆம் தேதியுடன் 13 நாட்கள் ஆகியுள்ளது. இந்த 13 நாட்களில் படம் ரூபாய் 325 கோடிகள் முதல் 328 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடிகள் வரை வசூல் ஆகியிருக்கும் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் படம் 13வது நாளில் ரூபாய் 2 கோடிகள் அல்லது 5 கோடிகளுக்கும் குறைவாக வசூல் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











