Vettaiyan Box Office Day 3: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்.. மூன்றாவது நாள் நிலவரம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோவுக்கான கண்டெண்ட்டாக இந்த படத்தின் கதையை இயக்குநர் ஞானவேல் மற்றும் கிருத்திகா ஆகியோர் அமைத்த விதம் பாரட்டுக்குரியது. மேலும் பொருளாதாரா குற்றப்பிரிவு அதிகாரியாக ரஜினி மாற்றப்பட்டபின்னரும்கூட, வில்லனுக்கு எந்த வகையில் தண்டனை பெற்றுத் தரலாம் என கதையை நகர்த்திய விதம் அருமை.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தினை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சென்றது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மொபைல்: படத்தில் சூப்பர் ஸ்டார் பயன்படுத்தியது, சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள ' SAMSUNG GALAXY Z FLIP 6 ' என்ற மொபைல் போன் ஆகும். இதன் விலை குறைந்த பட்சம் ஒரு லட்சம். இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மொபைல் ஆகும். அதேபோல் இந்த மொபைலின் அதிக பட்ச விலை ரூபாய் ஒரு லட்சத்து 21ஆயிரம் ஆகும்.

ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மொபைல் 12 ஜி.பி ரேம் மற்றும் 512 ஜி.பி இண்டர்னல் ஸ்டோரேஜ் திறன் கொண்டதாக உள்ளது. இதே மொபைல் 8 ஜி.பி ரேமில் உள்ளது. அதன் விலை ரூபாய் 65 ஆயிரம் என சாம்சங் நிறுவனம் விலை நிர்ணயித்துள்ளது. இந்தவகைப் போனில் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளது. மேலும் இதன் கேமரா அதிக பட்சம் 50 எம்.பி திறன் கொண்டது. முன் பக்கம் உள்ள கேமரா 10 எம்.பி திறன் கொண்டது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த மொபைலை இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.

விஜய்: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, "தளபதியின் கட்சி மாநாட்டிற்கு வாழ்த்துகள். நானும் அவரும் வேட்டையன் படம் பார்த்தோம். இருவரும் என்ஜாய் செய்து படத்தினைப் பார்த்தோம். எல்லோருமே தலைவர் ரசிகர்கள்தானே. விஜய் சார் மீண்டும் படம் நடிக்க வருவாரா எனத் தெரியவில்லை. அது தெரியாமல் நான் எப்படி அவரும் அஜித் சாரும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா எனக் கூறமுடியும் " எனவும் பதில் அளித்தார். விஜய் ரசிகர்கள் வேட்டையன் படத்தினை டிசாஸ்டர் என விமர்சித்த நிலையில், விஜய் வேட்டையன் படம் பார்த்தது அவரது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வசூல்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இல்லாமல் அண்டை மாநிலங்கள் வட மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்த தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்நிலையில் படம் மூன்றாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 25 கோடிகளில் இருந்து 30 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அதேபோல் முதல் இரண்டு நாளில் படம் ரூபாய் 60 கோடிகள் முதல் 65 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுவரை படம் ரூபாய் 90 கோடிகள் முதல் 95 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. வார இறுதி நாளான இன்று வேட்டையன் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு நம்புகின்றது. மேலும் படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











