Vettaiyan Box Office Day 5: ஹன்டர் வன்டார் சூடு கண்ணா.. ஐந்து நாள் வசூலுக்கே அதிரும் பாக்ஸ் ஆஃபீஸ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஆயுதபுஜை, விஜயதசமி விடுமுறை நாட்களைக் குறிவைத்து ரிலீஸ் ஆன படம் வேட்டையன். வேட்டையன் சூப்பர் ஸ்டாரின் 170வது படம். இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் ஐந்து நாட்கள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டர்களினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். சமூக அக்கறையுள்ள கதையை, சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோவுக்கான கண்டெண்ட்டாக இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஞானவேல் மற்றும் கிருத்திகா ஆகியோர் அமைத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். படத்தில் Buds Act குறித்து விளக்கும் காட்சிகள், ரசிகர்களுக்கு தரமான வகுப்பு எடுப்பதைப்போல இருந்தது.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தினை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சென்றது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழ் ராக்கர்ஸ்: மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயந்தே இரண்டாம் மோஷனம் படத்தினை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்த வழக்கில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இரண்டு பேரை, கொச்சி காக்கநாடு பகுதியைச் சைபர் க்ரைம் போலீசார், பெங்களூருவில் இருவரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் குமரேசன் அவர். அதன் பின்னர் அவர்களிடத்தில் வேட்டையன் படத்தின் பைரசி காப்பியும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், இதனை கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் பதிவு செய்ததாகவும், தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் ராக்கர்ஸைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சைபர் க்ரைம் போலீசார் உறுதி செய்தனர். இந்தத் தகவல் லைகா நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்கள்: வேட்டையன் படம் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே படம் மிகப்பெரிய தோல்விப்படம் என விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர். படம் ரிலீஸ் ஆன பின்னர் வேட்டையன் டிசாஸ்ட்டர் என ட்ரெண்ட் செய்தனர். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். மேலும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பரமணியம் பேசும்போது, படம் தரமான படம் எனவும், பொதுமக்களுக்கு ஏற்ற படம் எனவும் கூறினார். விஜய் ரசிகர்கள் ஒருபுறம் படத்திற்கு எதிராக செயல்பட்டாலும், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை விஜய் தேவி திரையரங்கில் பார்த்தார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல்: படம் தமிழ் நாட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அது வசூலை பாதிக்கவில்லை. குறிப்பாக நீட் தேர்வு, நீட் தேர்வு கோச்சிங் போன்றவற்றால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெளிவாக காட்டி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், தமிழ்நாட்டினைக் கடந்து அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆஃபீஸில் செம வசூல் பார்த்து வருகின்றது. இந்நிலையில் படம் ஐந்தாவது நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 15 கோடிகளில் இருந்து 20 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே முதல் நான்கு நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 240 கோடிகள் வசூல் செய்ததாக அறிவித்தது. இந்நிலையில், ஐந்தாவது நாள் வசூலையும் கணக்கில் கொண்டால், ஏறக்குறைய ரூபாய் 255 கோடிகளில் இருந்து ரூபாய் 260 கோடிகள் வசுல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இந்த செய்தி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











