Vettaiyan Box Office Day 8: எட்டுத் திசையும் ஹிட் அடித்த ஹன்ட்டர்.. பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை விவரம் இதோ!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பரவலாக மழை பெய்து நேற்றில் இருந்து கொஞ்சம் ஓயத்தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், தியேட்டர் பக்கம் பெரும்பாலும் யாரும் வரவில்லை. பல காட்சிகள் மிகக் குறைவான ரசிகர்களுக்காகவே திரையிடப்பட்டது. மழை ஓய்ந்து மக்களும் இயல்பு வாழ்க்கையை நோக்கி மெல்ல மெல்ல திரும்பியுள்ளதால், மக்கள் தியேட்டருக்கு வரும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் 8 நாட்கள் ஆகின்றது. அந்த 8 நாட்கள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

rajinikanth vettaiyan vettaiyan box office

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா புரடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படம் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படம் ஆகும். படம் என்கவுன்ட்டர் குறித்தும் நீட் தேர்வு, நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்கள், நீட் தேர்விற்கு கோச்சிங் கொடுக்கின்றோம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளை ஆகிவற்றை மைய்யமாகக் கொண்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

rajinikanth vettaiyan vettaiyan box office

படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது. இதுமட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியை வீட்டில் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் ஏற்கனவே ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ ரைட்ஸ் என பலவிதங்களில் நல்ல வருவாயை ஈட்டித் தந்துள்ள நிலையில், தியேட்டரிலும் நல்ல வசூல் கொடுத்துள்ளதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, லைகா நிறுவனம் வசூல் ரீதியாக வெற்றிப் பயணத்திற்கு திரும்பியுள்ளது என திரைத்துறையினர் பரவலாக பேசி வருகின்றனர்.

rajinikanth vettaiyan vettaiyan box office

கருத்து: படம் பார்த்த ரசிகர்கள் சமூக அக்கறை கொண்ட படம், இந்தியா முழுவதும் படத்தினை திரையிட வேண்டும். அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கான மாஸ் காட்சிகளும் படத்தில் உள்ளது. அதேபோல் ஞானவேல் தான் சொல்ல வந்ததையும் சொல்லிவிட்டார். அனைத்து பள்ளிகளிலும் படத்தினை திரையிடவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

rajinikanth vettaiyan vettaiyan box office

என்கவுன்ட்டர்: படத்தின் டிரைலரைப் பார்த்ததும் படம் என்கவுன்ட்டருக்கு ஆதரவான கருத்தினை மைய்யப்படுத்தி உள்ளதோ என ரசிகர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் படம், என்கவுன்டருக்கு எதிரான கருத்தினை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

rajinikanth vettaiyan vettaiyan box office

வசூல்: படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின்னர் கனமழை அதிகரித்ததால், மக்கள் பெரிதாக படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல காட்சிகள் மிகவும் குறைவான ரசிகர்களுகே திரையிடப்பட்டது. மழை ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால், தியேட்டரிலும் ஓரளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் படம் முதல் 8 நாட்களில் ரூபாய் 280 கோடிகளில் இருந்து ரூபாய் 285 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X