Rajinikanth: 44வது திருமண நாளைக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.. மனைவியுடன் வெளிநாட்டில் ஜாலி செய்றாரே!
துபாய்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி தனது 44வது ஆண்டு திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாடினார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் இவரது திருமண நாளுக்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு எல்லாம் நடத்தினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தனது திருமண நாளை தனது மனைவி லதாவுடன் துபாயில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. லதாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் இடையில் காதல் மலர்ந்த கதை பலருக்கும் தெரியும் என்றாலும், அவர்களின் காதல் கதை சுவாரஸ்யமானது.

லதா பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் உறவினர். அவர் மூலம் தனது கல்லூரி அசைன்மெண்டிற்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றார். பேட்டியில் தொடங்கிய அவர்களின் சந்திப்பு, காதலாக மாறிவிட, அதன் பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்கள். ரஜினி நடித்த காளி படத்தை இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்த்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ரஜினி - லதா: ரஜினியை லதா சந்திக்கும் முன்னர், அவரது திருமணம் குறித்து வீட்டில் பேசியுள்ளார்கள். அதற்கு லதாவோ மூன்று ஆண்டுகள் போகட்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் ரஜினி வீட்டிற்கு வந்து பெண் கேட்கப் போகிறார். அப்போது, சரி என எப்படி பெற்றோர்களிடம் கூறுவது என வெட்கத்தோடும் கொஞ்சம் சங்கடத்தோடும் இருந்துள்ளார் லதா.

காதல் திருமணம்: ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததால், இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில், மிகவும் எளிமையாக மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை 44 ஆண்டுகள் நிறைவடைந்து 45 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியர் தங்களின் 44வது ஆண்டு திருமண நாளை துபாயில் கொண்டாடியுள்ளனர்.
மகா சிவராத்திரி: தனது திருமண நாளை கொண்டாட, தாய்லாந்தில் நடைபெற்ற கூலி படத்தின் படப்பிடிப்பில் இருந்து வந்துள்ளார் சூப்பர் ஸ்டார். இந்த ஆண்டு இவரது திருமண நாளிலேயே மகா சிவராத்திரி வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறை நம்பிக்கை உள்ளவர். தனது திருமண நாளும் மகா சிவராத்திரியும் ஒரே நாளில் வந்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார்கள். இவர் தனது மனைவி லதாவுடன் துபாயில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











