twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அண்ணாத்த' க்கு நேரம் சரியில்ல போல...மீண்டும் நிறுத்தப்படுகிறதா சூட்டிங் ?

    |

    சென்னை : ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் சூட்டிங் 2019 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி துவங்கப்பட்டது. ஐதராபாத் ரமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படுவேகமாக சூட்டிங் நடைபெற்றது.

    திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்!திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்!

    2020 ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா மற்றும் புனேயில் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், பல மாதங்களாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

    கொரோனாவால் நிறுத்தப்பட்ட சூட்டிங்

    கொரோனாவால் நிறுத்தப்பட்ட சூட்டிங்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 2020 டிசம்பர் 16 அன்று ஐதராபாத்தில் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மீண்டும் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

    ரஜினிக்காக காத்திருந்த அண்ணாத்த

    ரஜினிக்காக காத்திருந்த அண்ணாத்த

    அதற்கு பிறகு உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையை காரணமாக சொல்லி அரசியலில் நுழையும் எண்ணத்தையும் கைவிட்ட ரஜினி, டாக்டர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க சென்றதால் மீண்டும் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

     சென்னையில் பிரம்மாண்ட செட்

    சென்னையில் பிரம்மாண்ட செட்

    பல கட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் அண்ணாத்த சூட்டிங்கை தொடர திட்டமிடப்பட்டது. பிரம்மாண்ட செட் அமைத்து, தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்கு சூட்டிங்கை தொடர முடிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு பொள்ளாச்சியில் பெரும்பகுதியை படமாக்க திட்டமிடப்பட்டது.

    மீண்டும் நிறுத்தப்படுகிறதா அண்ணாத்த

    மீண்டும் நிறுத்தப்படுகிறதா அண்ணாத்த

    ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அண்ணாத்த சூட்டிங் மீண்டும் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், ரஜினியின் உடல்நிலை காரணங்களை கருத்தில் கொண்டும் சூட்டிங்கை நிறுத்த படக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

    ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

    சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிக்கிறது. நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

    English summary
    latest reports suggest that Annaathe shooting postponed again
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X