இணையத்தை கலக்கும் அண்ணாத்த... நாளை செம மாஸ் காட்டபோகுது!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

இந்த தகவலை படக்குழு வெளியிட்டது தான் தாமதம் இணையத்தில் அண்ணாத்த ஹேஸ்டேக்குகள் தெறிக்க ஆரம்பித்து விட்டன.

காலா, பேட்டை, தர்பார் திரைப்படத்தை அடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

காலா

காலா

இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காலா திரைப்படத்தை எடுத்தார். 2018ம் ஆண்டு வெளியானது இப்படம் மும்பை தாராவி மக்களின் வாழ்க்கையைப் பேசியது. இந்தப் படமும் நல்ல வெற்றியைக் கொடுத்தது. குடும்ப உறவுகள் கொண்ட இந்த படத்தில் ரஜினி... இது காலா கில்லா... என் கோட்டை என்று வசனம் பேசி தும்சம் செய்து இருப்பார்.

இளமை திரும்புதே

இளமை திரும்புதே

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் திரைப்படம் பேட்டஇப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வயதான கேரக்டரில் நடித்து இளமை திரும்புதே பாடி அனைவரையும் சொக்குப்பொடி போட்டு மயக்கினார்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

இந்த இருதிரைப்படங்களில் வெற்றியைத் தொடரந்து தர்பார் திரைப்படம் வெளியானது இதில் நயன்தாராவின் சூப்பரானா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஸ்டைலில் சும்மா அப்படி இருப்பார். இப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டி இருப்பார். எந்த ஸ்டாலில் ரஜினியை பார்த்தாலும் ஸ்டைல் தான்... பட்டு வெட்டி சட்டையில் நம்ம தலைவரா பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ஏங்கி மக்களுக்காக வந்த திரைப்படம் தான் அண்ணாத்தா...

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

நாளை ஃபர்ஸ்ட் லுக்

நாளை ஃபர்ஸ்ட் லுக்

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 அணிக்கும் வெளியாக உள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

செம ட்ரீட்

செம ட்ரீட்

விநாயகர் சதுர்த்தி அதுவுமா செம ட்ரீட் என்று இணையத்தில் அண்ணாத்த திருவிழா ஆரம்பம் என்று ரஜினி ரசிகர்கள் சும்மா இணையத்தை தெறிவிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X