Rajinikanth Health: மருத்துவமனையில் ரஜினி.. நலம்பெற பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய, பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது, வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ரஜினியின் 170வது படமான இப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

rajinikanth health vettaiyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினிக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டு, வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அடி வயிற்றில் வீக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

rajinikanth health vettaiyan

இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஐசியூவில் இருந்து விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நலம்பெற வாழ்த்து: இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமலஹாசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த்
அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்

rajinikanth health vettaiyan

இறை பலம் தரட்டும்: அதே போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது எக்ஸ் தள பக்கத்தில், புன்னகை மன்னன், ஸ்டைலின் பிறப்பிடம், என்றுமே ராஜாவான சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உடல் நலம் பெற்று விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிக்கொள்கிறேன். அதே புன்னகையோடும்... வேகத்தோடும் இயங்க இறை பலம் தரட்டும் என பதிவிட்டுள்ளார். இதே அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவர் உடல் நலம் பெற வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X