திருப்பதியில் சூப்பர் ஸ்டார்.. குடும்பத்துடன் சிறப்பு தரிசனம்.. ரசிகர்களுக்கு தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த். அடுத்த சில ஆண்டுகளிலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை திரையுலகில் எட்டினார். இவரது 25வது ஆண்டு திரை வாழ்க்கையில் அதாவது, கடந்த 1999 ஆம் ஆண்டு, வெளியான படம் தான் படையப்பா. ரஜினி கதை அமைத்து தயாரித்து நடித்திருந்தார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை அமைத்தும், வசனங்கள் எழுதியும் இயக்கி இருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இவரது 50வது ஆண்டு திரை வாழ்க்கை மற்றும் 75வது பிறந்த நாளை முன்னிட்டு படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினர் மற்றும் ஜெயிலர் 2 படக்குழுவினருடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

Superstar Rajinikanth at Tirupati Tirumala Temple with his Family Video
Photo Credit:

திருப்பதி: இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று வெங்கடாசலபதியை தரிசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவருடன் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, சௌந்தர்யாவின் கணவர் மற்றும் மகன். அதேபோல் ஐஸ்வர்யாவின் மகனளான லிங்கா மற்றும் யாத்ரா உள்ளிட்ட அனைவரும் உடன் இருந்தனர்.

மொத்த குடும்பம்: இவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த ரசிகர்கள், அவரை நோக்கி ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்கள். அதேபோல் சிலர் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி கத்தினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X