கோலாகலமாக நடந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. நேரில் வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்!
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருமண மண்டபத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துகண்ணுவின் மகள்கள் கவிதா, அனிதா இவர்கள் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். அருண்விஜய் இவர்களின் சகோதரர் ஆவார். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து, முதல் மனைவியின் சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமாரின் பேத்தி: இவர்களுக்கு வனிதா, ப்ரீத்தா,ஸ்ரீ தேவி என மூன்று மகள்கள் இவர்கள் மூன்று பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். கவிதா, அனிதா இருவருமே மருத்துவர் என்பதால், இவர்கள் இருவரும் சினிமாவில் தலைகாட்டவில்லை. அனிதா கல்லூரியில் படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனிதா-கோகுல் தம்பதியருக்கு மகன் ஸ்ரீஜெய், தியா என இரண்டு பிள்ளைகள். இதில் தியா அம்மாவைப் போலவே மருத்துவராக வேண்டி வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்.

கோலாகலமாக நடந்த திருமணம்: இவருக்குதான் இன்று திலன் என்பவருடன் காதல் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்ட நிலையில் இன்று நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்த மகாபலிபுரம் ரெஸ்டாரண்டில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆட்டம் பாட்டத்துடன் கல்யாணம்: இந்த திருமணத்திற்காக நடிகர் விஜயகுமார் மகள் அனிதா இரண்டு மாதத்திற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து வந்து கல்யாண வேலைகளை கவனித்து வந்தார். பிரபலங்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, சங்கீத், மெஹந்தி பங்ஷன் என நிகழ்ச்சி படுஜோராக ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது.
நேரில் வாழ்த்திய பிரபலங்கள்: இந்நிலையில் இன்று கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதுபோலவே, நடிகைகள் மீனா, சிநேகா, பிரசன்னா உள்ளிட்ட ஏராளமானத் திரைப்பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டுள்ளனர். இதில், விஜயகுமார், அனிதா, கவிதா, அருண் விஜய், மருமகள் ஆர்த்தி என குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











