twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் இதயத்திற்கு நெருக்கமான படம் “பாபா“..புது பொலிவுடன் வெளியானது டிரைலர்!

    |

    சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தின் டிரைலர் புதுப்பொலிவுடன் வெளியாகி உள்ளது.

    2002ம் ஆண்டு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் கதை,திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் பாபா.

    இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ரலா நடித்திருந்தார். மேலும், கவுண்டமணி, எம்.என்.நம்பியார்,நாசர்,ரம்யா கிருஷ்ணன், சுஜாதா, சீமா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

    தங்க தட்டில் சாப்பாடு, வெள்ளை குதிரை சவாரி..கொலை வழக்கு, சிறைவாசம்..முதல் சூப்பர் ஸ்டார் வீழ்ந்த கதைதங்க தட்டில் சாப்பாடு, வெள்ளை குதிரை சவாரி..கொலை வழக்கு, சிறைவாசம்..முதல் சூப்பர் ஸ்டார் வீழ்ந்த கதை

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டாரு யாரு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றார் போல இளசு முதல் பெரிசு வரை அனைவரின் பேவரைட் ஹீரோ மூன்று தலைமுறையின் கதாநாயகனாக இருக்கிறார் ரஜினி. இவர் நடந்தாலும் அழகு, சிரித்தாலும் அழகு, லுக்கு விட்டாலும் அழகு என இவர் பின்னால் தனி கூட்டாமே சுற்றிக்கொண்டு இருக்கிறது.

    பாபா புது டிரைலர்

    பாபா புது டிரைலர்

    பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புது பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். படத்தின் ஆரம்பத்தில் அவரது உரையாடலோடு படம் தொடங்க உள்ளதால், படத்தின் சில காட்சிகளுக்கு புதிதாக குரல் பதிவும் செய்துள்ளார்.

    இதயத்திற்கு நெருக்கமான படம்

    இதயத்திற்கு நெருக்கமான படம்

    இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு திரைப்படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மகா அவதாரம் பாபாஜி

    மகா அவதாரம் பாபாஜி

    மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு பாபாவின் அருள் கிடைக்கிறது. இதையடுத்து அவருக்கு 7 மந்திரங்களை பாபா கொடுக்கிறார். ஆனால், நாத்திகரான ரஜினி அந்த மந்திரத்தை சோதனை செய்து பார்த்து வீணாக்கி விடுகிறார். கடைசியாக அவருக்கு இறைவன் மீது நம்பிக்கை வந்து வாழ்க்கை ஓர் மாயை என்பதை புரிந்து கொண்டு பாபாஜியுடன் சென்று விடுவதுதான் கதை.

    பாபா முத்திரை

    பாபா முத்திரை

    இந்த படம், வெளியான நேரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டும் இல்லாமல் 10 நிமிஷத்துக்கு ஒருமுறை பஞ்ச் வசனமும், ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவ்வளவு ஏன் ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால், பாபா முத்திரைதான் சின்னம் என்றேல்லாம் கூட பேச்சுக்கள் அடிபட்டன.

    டிசம்பர் 12ந் தேதி

    டிசம்பர் 12ந் தேதி

    புதுப்பொலிவுடன் உருவாகி உள்ள இத்திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரீ ரிலீஸ் ஆகவுள்ள பாபா படத்தின் நீளம் 2:30 மணி நேரத்துக்குள் சுருக்கப்பட்டதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Superstar Rajinikanth today said that his 2002 film Baba will always be close to his heart. The film's remastered version is reportedly heading for a re-release on December 12, marking the actor's birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X