குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்... வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடியுள்ளார்.

இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதனிடையே பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் சூப்பர்ஸ்டார் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் இந்திய அளவிலான பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்தனர். மேலும் ரஜினியின் ரசிகர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

ட்ரெண்டிங் ஆன பிறந்தநாள்

ட்ரெண்டிங் ஆன பிறந்தநாள்

நேற்றைய தினம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்த்டே என்ற. ஹேஷ்டேக்குகள் தெறிக்க விடப்பட்டன. ட்விட்டரில் தொடர்ந்து ரஜினிகாந்த் டிரெண்டிங்கில் இருந்தார். நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

அரசியல் பிரபலங்கள் வாழ்த்து

அரசியல் பிரபலங்கள் வாழ்த்து

பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, பேரன்கள், மருமகன் மற்றும் சொந்த பந்தங்கள் சூழ அவர் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

இதன் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் ரஜினி கேக் வெட்டிய படியும் தனது மகள்களுடன் போஸ் கொடுத்தபடியும் காணப்படுகிறார்.

71வது வயதை எட்டியுள்ள ரஜினிகாந்த் தன்னுடைய உடலை சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்தில் இவரது கட்டுக்கோப்பான உடல் வெளிப்பட்டது. வயதானாலும் இவரது ஸ்டைல் குறையவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X