Rajinikanth Net Worth: 73 வயது எந்திரன்.. ஸ்டைல் சாம்ராட் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சென்னை: இந்த வயதிலும் ரஜினிகாந்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து இளம் நடிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட நடக்க முடியாது என சொல்லும் அளவுக்கு 73 வயதிலும் ரியல் லைஃப் எந்திரனாகவே கெத்துக் காட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வசித்து வந்த மராட்டிய குடும்பத்தில் பிறந்த சிவாஜி ராவ் கெய்க்வாட். சாதாரண கூலி வேலை முதல் கண்டக்டர், தெருக்கூத்து கலைஞர் என பல வேலைகளை செய்து வந்து சினிமா மீது ஏற்பட்ட மோகத்தால் சென்னைக்கு வந்து சினிமாவை கற்றுக் கொண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார்.

Superstar Rajinikanth celebrates his 73rd birthday today here we lookout his net worth details

1975ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த் 2023ம் ஆண்டிலும் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக தனது 73வது வயதிலும் இளம் நடிகர்களுக்கே கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்: பெங்களூரில் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்த ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

48 ஆண்டுகள் கிங் ஆஃப் சினிமா: ஸ்டைல் சாம்ராட் என கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த தனது திரை வாழ்க்கையை 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக கடந்து அடுத்த ஆண்டும் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு என்டர்டெயின் செய்யும் விதமாக படங்களை கொடுத்து கிங் ஆஃப் கோலிவுட் சினிமாவாகவே திகழ்ந்து வருகிறார். யார் ரசிகராக இருந்தாலும், அந்த நடிகர்களே ரஜினி ரசிகர் தான் என்பது தான் இங்கே மறக்க முடியாத தனிச் சிறப்பு. லியோ வெற்றி விழாவிலேயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் என விஜய்யே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு: நடிகர் ரஜினிகாந்துக்கு போயஸ் கார்டனில் ஒரு பெரிய பங்களா 40 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. மேலும், ரஜினிகாந்திடம் இருக்கும் விலையுயர்ந்த 4 ஃபாரீன் கார்களின் விலை மட்டுமே 20 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக நடிகர் ரஜினிகாந்திடம் 480 முதல் 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 கோடி சம்பளம்: ஜெயிலர் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றும் தலைவர் 170 படத்துக்கு 140 கோடி சம்பளம் என்றும் தலைவர் 171 படத்துக்கு 200 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்மிகத்தை பலமாக நம்பும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X