Rajinikanth: குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்.. பேரன்களுடன் குதூகலம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு நடிகர்கள், இயக்குநர் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Superstar Rajinikanth celebrates his 73rd birthday with his family

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர். தன்னுடைய ஸ்டைலால் தற்போதைய தலைமுறையையும் கொண்டாட வைத்து வருபவர். இன்றைய தினம் தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடிவரும் ரஜினிகாந்த், தொடர்ந்து தன்னுடைய ஹீரோ இமேஜை தக்க வைத்து வருகிறார். கடந்த 1975ம் ஆண்டில் துவங்கிய இவரது திரைப்பயணம் ஹீரோவாக மட்டுமில்லாமல் கேரக்டர் ரோல், வில்லன் என தொடர்ந்து வருகிறது.

ஜெயிலர் படம்: சமீபத்தில் இவரது ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் காட்டியது. 600க்கும் அதிகமான கோடிகளை வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். முன்னதாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி பிறந்தநாள்: இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூகவலைதளங்களிலும் நேரிலும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இன்று காலையிலேயே அவரது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் உள்ளிட்டவர்களும் ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

பிரபலங்கள் வாழ்த்து: ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் இந்த ஆண்டை மறக்க முடியாததாக்கியுள்ளதாக நெல்சன் பாராட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ரஜினி அனைவரையும் நடிப்பால் உத்வேகப்படுத்த வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வாழ்த்துப்பதிவில் கூறியுள்ளார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டவர்களும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

குடும்பத்துடன் கொண்டாட்டம்: இதனிடையே ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் சவுந்தர்யாவின் கணவர், பேரன்கள் உள்ளிட்டோருடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X