கமல் தப்பா எடுத்துக்காதீங்க.. எலக்ஷன் நேரத்தில் மூச்சு விட கூட பயமா இருக்கு.. ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: சென்னை வடபழனி ஆற்காடு சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சிக்கு மீடியாக்கள் இரண்டு மூனு பேர் தான் வருவாங்க, இதனால், சும்மா ரெண்டு வார்த்தை பேசுங்க என்று சொன்னார்கள். இங்க வந்து பார்த்தா இவ்வளவு மீடியாக்கள் இருக்கிறார்கள். இவங்களை பார்த்தாலே பயமா இருக்கு என்றார்.

காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் கடந்த 25 வருஷமாக எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை. நான் இப்படியான விழாக்களில் கலந்துகிட்டால் அந்த கல்லூரிக்கு நான் பார்ட்னர், என்னோட பங்கு அதுல இருக்குனு சொல்வாங்க. ஒரு விழால கலந்துகிட்டால் தொடர்ந்து கூப்பிடுவாங்கனு என்பதால் எல்லாத்தையும் மறுத்துவிட்டேன்.

Superstar Rajinikanth Comedy speech at kauvery hospital opening ceremony

காவேரி மருத்துவமனை திறப்பு விழா: ஆனால், மருத்துவர்கள் பற்றியும், நர்ஸ் பற்றியும் நன்றாக தெரியும் என்பதால் என்னை அழைத்தார்கள். அவர் சொன்னது 100க்கு 100 உண்மைதான். ஏன் என்றால், இந்த உடம்பு, இசபெல் மருத்துவமனையில் இருந்து, விஜயா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, ராமசந்திரா மருத்துவமனை தொடங்கி சிங்கப்பூர், எலிசபெத் மருத்துவமனை, அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை வரைக்கும் இந்த உடம்பு போயிட்டு வந்து இருக்கு. இதனால், மருத்துவர்கள் மேலயும், செவிலியர்கள் மேலேயும் நல்ல மரியாதை இருக்கு. ஏன்னா, அவங்களோட உதவியாலயும் முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலயும்தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்.

ரஜினிகாந்த் பேச்சு: இந்த இடத்தை பார்க்கும் போது எனக்கு பல விஷயம் ஞூபகத்திற்கு வருகிறது. குறிப்பாக இந்த இடத்தில் விசு அவர்கள் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படம் எடுத்தாங்க, படம் சூப்பராக ஓடி வசூலை அள்ளியது. அதுக்கு பிறகு இது ஒரு ராசியான வீடுனு எல்லோரும் நினைச்சாங்க. இதே இடத்துல பல படத்தோட ஷூட்டிங் நடந்திருக்கு. அந்த படமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. என்னுடைய சில படத்தின் ஷூட்டிங்கும் இதே இடத்துல நடந்திருக்கு. அந்த படமெல்லாம் சூப்பர் ஹிட் தான். அப்படி ராசியான இடத்தில் தான் இப்போ இந்த காவேரி மருத்துவமனை திறந்திருக்காங்க. இந்த மருத்துவமனை நன்றாக வளர்ந்து பலரை குணப்படுத்த வேண்டும்.

Superstar Rajinikanth Comedy speech at kauvery hospital opening ceremony

கமல் தப்பா எடுத்துக்காதீங்க: முதலில் காவேரி மருத்துவமனை ஆழ்வார் பேட்டையில் ஒரு கட்டிடத்தில் தொடங்கினாங்க, அதன்பிறகு பக்கத்து கட்டிடத்தையும் வாங்கிட்டாங்க, முதலில் எல்லாம், காவேரி மருத்துவமனை எங்க இருக்குனு கேட்டால் கமல்ஹாசன் வீட்டுப் பக்கத்துல இருக்குனு சொல்வாங்க. இன்னைக்கு கமல்ஹாசன் வீடு எங்க இருக்குனு கேட்டால் காவேரி மருத்துவமனை பக்கத்துல இருக்குனு சொல்றாங்க. இதைக்கேட்டு கமல்ஹாசன் தப்பா நினைச்சிக்கக்கூடாது. மீடியா நண்பர்களே சும்மா சொல்றேன். கமல்ஹாசனை கலாட்டா பண்றேன்னு யாரும் எழுதிடாதீங்க.

மூச்சுவிடக்கூட பயமாக இருக்கு: மேலும், இந்த நிகழ்ச்சியில் இங்க பேச வேண்டாம்னு நினைச்சேன். கொஞ்சம் மீடியா ஆட்கள் தான் வருவாங்க. இதனால், சும்மா ரெண்டு வார்த்தை பேசுங்கனு என்கிட்ட சொன்னாங்க. இங்க வந்து பார்த்தால், இத்தனை கேமராவை பார்த்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு. எலக்ஷன் நேரம் வேற, மூச்சு விடக்கூட பயமாக இருக்கு என்று மருத்துவமனை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X