எனது உத்வேகமே மடிந்து விட்டது.. ராமோஜி ராவ் மறைவால் மனமுடைந்த சூப்பர் ஸ்டார்!
ஒட்டுமொத்த இந்தியாவுமே இன்றைக்கு ஒரு விசயத்தைப் பற்றி மிகவும் பரபரப்பாக பேசி வருகின்றது என்றால் அது, ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராமோஜி ராவ் குழுமத்தலைவர் ராமோஜி ராவ் மறைவைப் பற்றிதான்.
வயது மூப்பு காரணமாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் இன்று அதாவது ஜூன் மாதம் 8ஆம் தேதி காலை மரணம் அடைந்தார். இவரது மறைவையொட்டி இந்திய பிரதமர் தொடங்கி அரசியல் தலைவரகளும் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தொடங்கி டெக்னீஷுயர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் ரமோஜி ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு மிகவும் நான் மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் சரித்திரம் படைத்தது மட்டும் இல்லாமல், அரசியலில் மாபெரும் கிங்மேக்கராகத் திகழ்ந்தவர் மறைந்த ராமோஜி ராவ் அவர்கள். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ராமோஜி ராவ்?
1936 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்த கிருஷ்ணா மாவட்டத்தின் பெடபருபுடி என்ற கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ராமோஜிராவ். பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ராமோஜி ராவ் அதன் பின்னர் தனது அயராத உழைப்பால் தொழிலதிபராக மாறினார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பிரபலம் அடைந்த ஈ நாடு செய்தித்தாள், ஈ டிவி தொலைக்காட்சி குழுமம் ஆகியவற்றை உருவாக்கியவர் இந்த ராமோஜிராவ் தான். இது மட்டுமில்லாமல் உலகப் புகழ் பெற்ற ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை உருவாக்கிய புகழும் இவரையே சாரும். இந்த பிரம்மாண்டமான ஃபிலிம் சிட்டியில் பாகுபலி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 கேஜிஎஃப், RRR, பொன்னியின் செல்வன், சலார், உள்ளிட்ட படங்களின் பிரமாண்ட செட்டுகள் இங்கு தான் அமைக்கப்பட்டது.
இது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா ஹாலிவுட் சினிமாக்கள் பலவும் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கூட இந்த பிலிம் சிட்டியில் தான் நடந்து முடிந்துள்ளது.
பத்ம விபூஷன் விருது
பல மாநில அரசியல் தலைவர்களிடமும் நட்பாக பழகி வந்த ராமோஜிராவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ராமோஜி ராவ் கடந்த ஐந்தாம் தேதி மூச்சு திணறல் மற்றும் அதிக ரத்தக் கொதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் நானக்ராம்குடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார். ராமோஜி ராவின் உடல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











