Rajini: பெரிய மனுஷன் சார் நீங்க.. லியோ படம் பற்றி ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: விஜய்யின் லியோ படம் வெற்றி அடைய ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Superstar Rajinikanth congratulates Vijay Leo for success

இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் 3 நாட்களுக்கு நடந்து வந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

ரஜினிகாந்த் பேட்டி: கன்னியாகுமரியில் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமானநிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், புவனா ஒரு கேள்விக்கு படத்திற்கு பிறகு இப்போது தான் இங்கே வருகிறேன். அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் வருத்தம் என்றார்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்: இதைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் தளபதி விஜய்யின் லியோ படம் 19ந் தேதி வெளியாவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரஜினி, லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார். இந்த பேட்டி இணையத்தில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பெரிய மனுஷன் சார் நீங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியை பிடிக்கும்: ரஜினிகாந்த் 170 படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர்171 படத்தில் கமிட்டாகி உள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த லோகேஷ், நான் சிறுவனாக இருக்கும்போதே ரஜினி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை காட்டி கூட எனக்கு சாப்பாடு ஊட்டியிருப்பார்கள். நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தாலும் அண்ணாத்த உட்பட ரஜினி சார் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X