அரங்கம் அதிரட்டுமே .. விசிலு பறக்கட்டுமே.. கூலி புது டீசர் வெளியானது.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு சற்று முன் அறிவித்து ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'கூலி' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

coolie Rajinikanth

கூலி படத்தின் அனைத்து பணிகளும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கூலி படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்பாராத விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கூலி படம் இன்னும் 100 நாளில் அதாவது ஆகஸ்ட் 14ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அரங்கம் அதிரட்டுமே... விசுல பறக்கட்டுமே என்ற பாடல் வரி பேக்ரவுண்டில் வர, மலையாள நடிகர் சௌபின் சாகிர்,உப்பேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடந்து செல்கின்றனர். கூடவே ரஜினி கடற்கரையில் நிற்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. முந்தைய படத்தில் சம்பவம் செய்தது போல இந்த படத்திலும் அனிருத் சம்பவம் செய்து உள்ளார். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

38 ஆண்டுகளுக்கு பின்: இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன்படி இப்படத்தில் நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு சுமார் 38 ஆண்டுகள் கழித்து, சத்யராஜ் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ளார். மொட்டை தலை, தாடி, கண்ணாடியுடன் கருப்பு வெள்ளையில் சத்யராஜ் இருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டது. அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த அனிருத்திடம் அடுத்தடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அனிருத், இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியாக உள்ளது. முதலில் 'கிங்டம்', அடுத்து 'கூலி' படம் வெளியாக உள்ளது. கூலி படத்தைமுழுப்படமும் பார்த்துவிட்டேன். படம் ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது என கூறியிருந்தார்.

ஜெயிலர் 2:கூலி படத்தை முடித்த கையோடு ஒய்வே எடுக்காமல் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது. ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் எந்த இயக்குநரின் படத்தில் இணையப்போகிறார் என்பது தெரியவில்லை. அவர், பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X