போலாம் ரைட்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ!

ஹைதராபாத்: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த டிசம்பர் 14ம் தேதி தனி விமானத்தில் ஹைதராபாத் வந்தார்.

படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாற்ற பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கட்சி அறிவிப்பு

கட்சி அறிவிப்பு

வரும் டிசம்பர் 31ம் தேதி தனது கட்சி அறிவிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றும், ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும், மக்கள் நலனுக்காக தனது உயிர் போனாலும் கவலை இல்லை என்றும், இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்றும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்றும் பேசி பரபரப்பை கிளப்பினார்.

அந்த கடமை இருக்கு

அந்த கடமை இருக்கு

மேலும், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும், 60 சத்வீத படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. மீதம் 40 சதவீதம் மட்டுமே பாக்கி, அதை முடிக்க வேண்டும் எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்துக்கு தனி விமானத்தின் மூலம் பறந்து சென்றார்.

ஷூட்டிங் நிறுத்தம்

ஷூட்டிங் நிறுத்தம்

ஆனால், திடீரென அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுமார் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். சீக்கிரம் சென்னைக்கு திரும்பும் ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

அப்பல்லோவில் அனுமதி

அப்பல்லோவில் அனுமதி

தனிமைப்படுத்திக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், அவர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என அறிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்தியும் பிரார்த்தனையும் செய்து வந்தனர். அப்பல்லோ தரப்பில் இருந்து ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளது என்றும் சிறிது ஓய்வு மட்டுமே தேவை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வைரலாகும் டிஸ்சார்ஜ் வீடியோ

இந்நிலையில், இன்று மாலை ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அவர் தனது காரில் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் மற்றும் அவர்களை நோக்கி கையெடுத்து கும்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி வாழ்த்து

நடிகர்கள் பவன் கல்யாண், மம்மூட்டி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் பரிபூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்திய நிலையில், தற்போது நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் சாரின் உடல்நிலை சீராகி வருவதாக வரும் தகவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சீக்கிரமே திரையில் அவரை காண விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

லேட்டாகும்

லேட்டாகும்

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் தீவிரமாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றும் விதமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக நிறுத்தப்பட்ட அண்ணாத்த பட ஷூட்டிங் மீண்டும் துவங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்படும் என்றும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஷூட்டிங் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X