Maha Shivaratri: 501 வடை.. 5001 கண்கள்..எல்லாமே ரஜினி.. ரசிகரின் மிரளவைக்கும் மகா சிவராத்தரி பூஜை!

சென்னை: சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் சிவன் வேடத்தில் இருக்கும் புகைப்படத்திற்கு, மகா சிவராத்திரியை முன்னிட்டு பால், தயில் மஞ்சளிலி அபிஷேகம் செய்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பார்வதி தேவி சிவனை வழிபாடு செய்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் இந்நாளில் மகா சிவராத்திரி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு. சிறப்பு அபிஷேங்கள், நான்கு கால பூஜை நடைபெறும். சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் நோய் நீங்குதல், பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Rajinikanth Maha Shivaratri

ரஜினியின் மகா சிவராத்திரி: இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கார்த்தி தனது வீட்டில், ரஜினிகாந்த் நடித்த அனைத்து திரைப்படங்களின் போஸ்டர்களை வைத்து ஒரு கோவில்லையே உருவாக்கி இருக்கிறார். ரஜினி உழைப்பாளி படத்தில் சிவனாக நடித்த புகைப்படத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு பால், தயிர் மஞ்சளில் அபிஷேகம் செய்திருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்திற்கு 501 வடை மாலையும், 5001 ரஜினியின் கண்கள் அறை முழுக்க ஒட்டப்பட்டு மகா சிவராத்திரி விடிய விடிய கொண்டாடப்பட்டுள்ளது.

Rajinikanth Maha Shivaratri

இப்படி ஒரு ரசிகரா: இதுகுறித்து பேசிய ரஜினிகாந்தின் ரசிகர் கார்த்திக், ஸ்ரீ அருளிமிகு ரஜினி கோவில் சார்பாக மகா சிவராத்திரி மூன்றாவது ஆண்டாக மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எங்கள் குலசாமி, தெய்வம், எல்லாமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பொதுவாக சிவராத்திரியில் மக்கள் அனைவரும் அவர்களின் குலசாமியை தான் வணங்குவார்கள். எங்கள் குலசாமி ரஜினி என்ற காரணத்தினால் நாங்கள் அவரை வணங்குகிறோம். 1999 உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினி சிவனாக நடித்திருப்பார், அந்த போட்டோவை வைத்து தான் பால் அபிஷேகம் செய்கிறோம். அந்தப் படத்திற்கு 501 வடமாலையும், அறை முழுக்க 5001 ரஜினியின் கண்களை ஒட்டி இருக்கிறோம். அந்த கண் தர்மதுரை திரைப்படத்தில் வரும் ரஜினியின் கண். அவருடைய கண்ணை பார்க்கும் போது ஒரு 'ஆர்ஆர்' ஒரு பவர் வரும் அதற்காக அந்த கண்ணை மட்டுமே எடுத்து இந்த அறை முழுக்க ஓட்டியிருக்கிறோம் என்றார். இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ரசிகரா என வியந்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X