Rajinikanth speech: நாகார்ஜுனா ரோலில் நானே நடிக்க ஆசைப்பட்டேன்.. தெலுங்கில் பேசி அசத்திய ரஜினிகாந்த்!

ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூலி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் அந்த நிகழ்ச்சியை உற்றுநோக்கியது. அதற்கு முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் தான். அவரை தொடர்ந்து இந்த படத்தில் நாகார்ஜுனா மெயின் வில்லனாக நடித்துள்ளார். கேமியோ ரோலில் அமீர்கான் முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Superstar Rajinikanth Full Telugu Speech for Coolie Hyderabad Pre Release Event
Photo Credit:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தெலுங்கில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கூலி நிகழ்ச்சி: சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கூலி படத்தை அதே போல பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியளவில் கூலி படத்தை ப்ரோமோட் செய்ய உள்ளனர். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அனைத்து மொழி பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இதே போன்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த்: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளை பேசக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க டோலிவுட் ரசிகர்களுக்காக தெலுங்கில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திரையுலகில் தனது 50வது வருடம் இது என்றும் பொன் விழா கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களை மகிழ்விக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்த படத்தில் கிங் நாகார்ஜுனா எனக்கு வில்லனாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்றார்.

நாகார்ஜுனா ரோலை நானே பண்ண ஆசைப்பட்டேன்: எனக்கு வில்லனாக நடிக்க ரொம்பவே பிடிக்கும். சைமன் கதாபாத்திரம் குறித்து லோகேஷ் சொன்னப்ப, நானே அதை பண்ண ஆசைப்பட்டேன். அதன் பின்னர், அந்த கதாபாத்திரத்தில் யாரு நடிக்கப் போகிறார் என்கிற ஆர்வம் எனக்குள் அதிகம் எழுந்தது. 6 முறைக்கு மேல் நரேட் செய்து சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அதில் நடிக்க கிங் நாகார்ஜுனா நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பின்னர், சர்ப்ரைஸ் சார் நாகார்ஜுனா தான் சைமன் ரோல் பண்றாருன்னு லோகேஷ் சொன்ன போது, எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாகி விட்டது. உண்மையாவா? அவர் வில்லனா நடிக்க ஒப்புக் கொண்டாரா? எனக் கேட்டேன். செம ஸ்டைலிஷ் ஆன வில்லன். அவரை பார்த்த போது, எப்படிங்க இந்த வயதிலும், செம பிசிக்குடன் அழகா இருக்கீங்க அந்த சீக்ரெட் சொல்லுங்க என்றுக் கேட்டேன். அவர் உடற்பயிற்சி, ஸ்விம்மிங், டயட் உள்ளிட்டவற்றை பகிர்ந்துக் கொண்டார். கண்டிப்பா அவரோட சீன் எல்லாம் தியேட்டர் தெறிக்கும் என பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X