Meesai Rajendran Daughter Wedding: மீசை ராஜேந்திரன் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்.. அந்த ஸ்பீடு மட்டும்!

சென்னை: தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகரான மீசை ராஜேந்திரனின் மகள் சௌபாக்கியவதி நமீதாவுக்கு இன்று அதாவது பிப்ரவரி 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக கடந்த சில மாதங்களாக திரைத்துறையினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நெகடிவ் கதாபாத்திரங்களிலேயே நடித்து பார்த்திருக்கிறோம். இவர் மறைந்த கேப்டனின் விசுவாசி என்று கூறினால் அதை பெருமையாக கருதும் நபராகவே இன்றைக்கும் உள்ளார். கேப்டன் மறைந்த போது பலரும் உடைந்து அழுதார்கள். அப்போது மீசை ராஜேந்திரன் எந்த அளவுக்கு அழுதார் என்பது இன்றைக்கு சமூக வலைதளங்களைப் அலசிப் பார்த்தாலும் தெரியும்.

Superstar Rajinikanth Graces Actor Meesai Rajendran s Daughter Namitha Wedding
Photo Credit:

மீசை ராஜேந்திரன் மகள் திருமணம்: கேப்டனை யாராவது ஏதாவது தவறாக சொல்லி விட்டால் கூட அவர்களிடத்தில் வம்புக்கு செல்லக்கூடியவர். இவர் தனது மகள் சௌபாக்கியவதி நமிதாவின் திருமணத்திற்காக கடந்த சில மாதங்களாகவே ஓடி ஓடி பத்திரிகை வைத்து வந்தார். நேற்று மாலையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மண மக்களான சிரஞ்சீவி கௌதம் கிரி - சௌபாக்கியவதி நமீதா ஆகியோருக்கு பசுமை கூடையை பரிசாக வழங்கி திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் தெரிவித்தார். முதலமைச்சர் காலில் விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கியது மட்டும் இல்லாமல், அப்போது மீசை ராஜேந்திரனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

சூப்பர் ஸ்டார்: அதேபோல் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். சூப்பர் ஸ்டாரை மண்டபத்தின் வாசலிலேயே மிகவும் நெகிழ்ச்சியாக வரவேற்ற மீசை ராஜேந்திரன், அவரே அவரை மேடைக்கு அழைத்துச் சென்று, மண மக்களை அறிமுகம் செய்து வைத்தார்.

Superstar Rajinikanth Graces Actor Meesai Rajendran s Daughter Namitha Wedding
Photo Credit:

மதிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு எப்போதும் மீசை ராஜேந்திரன் மீது நன்மதிப்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு தனது உடல் உறுப்புக்களை தானமாக எழுதி வைத்தார் மீசை ராஜேந்திரன். இந்த தகவலைக் கேள்விப்பட்டதுமே உடனே அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து, அவரது இந்த உள்ளத்தை பாராட்டினார். இது தொடர்பான தகவல்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த் வேகமாக நடந்ததைப் பார்த்த பலரும் அந்த ஸ்பீடு அவருக்கே உரிய ஸ்டைல் என்று வியப்புடன் பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X