ஹிந்திக்காரரை வம்புக்கு இழுத்த ரஜினி.. தலைதெறிக்க ஓடிய ரசிகன்..ஏன் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் பெரும் புகழையும், ஏராளமான ரசிகர்களையும் பெற்ற ஒரே நடிகராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவைத் தாண்டி, உலக சினிமாவிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ரஜினிகாந்திற்கு என்று தனி செல்வாக்கு உண்டு. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பு தளத்தில் ஹிந்திக்காரர் ஒருவரை வம்புக்கு இழுத்த சுவாரசியமானத் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மகத்தான வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தற்போது அவர் த.ச. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சமூக கருத்தை மையப்படுத்தி மக்களுக்கு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில், 30 ஆண்டுகளுக்கு பின் ரஜினி, அமிதாப் பச்சனுடன் இணைந்துள்ளார். மேலும், ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Superstar Rajinikanth ignored a fan who wanted to take a photo

லோகேஷ் கனகராஜின் கூலி: இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். வேட்டையன் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில், படத்திற்கான கதையை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.மேலும், சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்திற்கு கூலி என்ற தலைப்பு வைக்கப்பட்டு, அதற்கான டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிறப்பான படம்: ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் அவரது கெரியரில் சிறந்த திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார் என்றும், முக்கிய ரோலில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதி ஹாசன் எனப் பலரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் படக்குழு வெளியிடாமல் ரகசியமாக வைத்து இருக்கிறது.

சுவாரசியத் தகவல்: இந்நிலையில் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட ரஜினிகாந்த் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பேட்டியில் கூறினார். அதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது, செட்டில் ஒரு ஹிந்திக்கார பையன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தமிழ் சரியாக வராததால், தமிழ், இந்தி என இரண்டையும் கலந்து பேசுவான். இதை கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் என்பதால், ரஜினி சார் எப்பொழுதுமே அந்த ஹிந்திக்கார பையனை வம்பு இழுத்துக் கொண்டே, ஜாலியாக சிரித்துக்கொண்டு இருப்பார்.

ஓடிய ரசிகன்: ஒரு நாள், அந்த பையன் ரஜினியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டான், அதற்கு ஓகே சொன்ன ரஜினி, கொஞ்சம் வையிட் பண்ணு, விக்கை கழட்டி வைத்து விட்டு வருகிறேன் என்று சொன்னார். இதைக்கேட்டு டென்ஷனான அந்த பையன், விக்கை கழட்டுவதாக இருந்தால் உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டேன். எங்க ஊர்ல, நீங்கள் தலைமுடியோடு இப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என்று கூறிவிட்டு தலைதெறிக்க ஓடினான். அதன் பின், அந்த பையனை அழைத்து விக்கோட போட்டோ எடுத்தார்.

கவனித்து பார்ப்பார்: அதே போல ரஜினிக்கு சண்டை சொல்லிக் கொடுக்கும் போது நான் என்ன செய்கிறேன் என்பதை உன்னிப்பாக கவனிப்பார். அதன் பிறகு சைலன்டாக வந்து இதை எப்படி செய்தீர்கள்? நான் அதை இப்படி செய்ய வேண்டுமா என மிகவும் சைலண்டாக வந்து, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொள்வார் என்று ரஜினிகாந்த் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X