கமல்..ரஜினி..லோகேஷ் கனகராஜ்..மாஸ் கூட்டணி.. தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

விக்ரம்
கடந்த மாதம் ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் இதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது.

அனைவருக்கும் பரிசு
இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இதுபோல ஒரு வெற்றியை காணாத கமலஹாசன் விக்ரம் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். அதே போல, விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக்கை பரிசாக அளித்தார்.

மாஸ் கூட்டணி
விக்ரம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கமலுடன் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த முறை கமல் தயாரிப்பாளராக வருவார் என தெரிகிறது. அதாவது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் இணைவார் என தெரிகிறது. இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விபட்ட ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Recommended Video

ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனரின் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைத்தையும் நெல்சனே தீவிரமாக கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











