Actor Rajinikanth: ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்.. இமயமலையிலிருந்து வெளியான புகைப்படம்!
டேராடூன்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த இணைந்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த மாதம் முதல் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையுள்ள ரஜினிகாந்த், இடையில் கிடைத்த கேப்பில், கடந்த சில தினங்களாக அபுதாபியில் முகாமிட்டிருந்தார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டதுடன் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்தீருக்கும் விசிட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்/ அந்த வகையில் கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த லால் சலாம் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
வேட்டையன் பட ரிலீஸ்: இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்திற்கும் கூலி படத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவருக்கு சிறிது நாட்கள் ஓய்வு கிடைத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அபுதாபிக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் யூஏஇ சார்பில் அளிக்கப்பட்ட கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்தீருக்கும் சென்றிருந்தார்.
கோல்டன் விசா பெற்ற ரஜினிகாந்த்: இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அபுதாபியிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், மீண்டும் ஆன்மீக பயணத்தை துவங்கியுள்ளார். கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் இடையில் கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு ஆன்மீக சுற்றுப்பயணங்களுக்கு குறிப்பாக இமய மலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த பயணங்களை அவர் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்களில் தன்னை இணைத்து வருகிறார்.
ஆன்மீக பயணத்தில் ரஜினி: கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக அவர் இத்தகைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பகுதியில் அமைதியான இடத்தில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த், அங்கிருந்து வியூவை பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக தன் தோள் மீது ஷால் போட்டுக் கொண்டு அமைதியாக தன்னை சுற்றியுள்ளவற்றை பார்வையிடுவதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











