ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது..கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் ரஜினி..வெறித்தனமான பர்ஸ்ட் லுக்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்ணாத்த

அண்ணாத்த

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஷ்பு, மீனா, சூரி என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த போதும் ரஜினியின் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

ஜெயிலர்

ஜெயிலர்

இதனால், பல இளம் இயக்குநர்களிடம் கதைகளை கேட்ட ரஜினி, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனின் படத்தில் இணைத்தார். ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைக்க பிளான் போடுகிறது. அந்த சிறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஜெயிலரான ரஜினிகாந்த் அந்த பிளானை முறியடித்து, சிறையை காப்பாற்றுவது படத்தின் கதை என்பதால் படத்திற்கு ஜெயிலர் என தலைப்புவைக்கப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது. அதில், கண்ணாடி அணிந்து, கைகளை பின்னாடி கட்டிக்கொண்டு வயதான தோற்றத்துடன் ரஜினி நடந்து வருவது போல போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளதாக கூறியுள்ளது.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் ரஜினிகாந்த் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.அந்த காவல் நிலைய செட்டில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. அதை முடித்த பிறகு ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் படப்பிடிப்புகள் வெளி மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நெல்சனின் கோலாமாவு கோகிலா, டாக்டர் படங்கள் சென்னையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X