ஆத்தாடி… 'Hukum’ பாட்டுக்கு மேல இருக்கே ஜுஜுபி… ஜெயிலர் மூன்றாவது சிங்கில் ரிலீஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜுஜுபி சற்று முன் வெளியானது.

கோலமாவு கோகில,டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீஸ்ட் திரைப்படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிச்சயம் இந்த படம் ஒரு சம்பவத்தை செய்யும் என ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பாப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Superstar rajinikanth jailer movie 3rd single Jujube released

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக முடிந்து முடிந்து, படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Superstar rajinikanth jailer movie 3rd single Jujube released

தமன்னாவின் கிளுகிளு ஆட்டம்: இப்படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தமன்னாவின் கிளுகிளு ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மயங்கிப்போனார்கள். இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான இந்த பாடலுக்கு இளசுகள் முதல பெரிசுகள் வரை ஆட்டம் போட்டு இணையத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Hukum பாடல்: இதையடுத்து, இரண்டாவது பாடலான 'Hukum' பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. "பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா, உசுர கொடுக்க கோடி பேரு" என்ற வரிகள் இடம் பெற்ற ஹூக்கும் பாடலை சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு பதிலடி என ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கினர்.

களவாணி கண்ணைய்யா: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் சற்று முன் வெளியாகி உள்ளது. களவாணி கண்ணைய்யா என தொடங்கும் ஜுஜுபி பாடலை பாடகி தீ பாடி உள்ளார். சூப்பர் சுப்பு எழுதி உள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலை கேட்கும் போது சும்மா தெறிக்கவிட்டு இருக்காரு தலைவரு என்று ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பாடலை கேட்கும் போது 'Hukum' பாட்டுக்கு மேல இருக்கே என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X