Jailer Box office collection: இங்க நான் தான் கிங்.. ஆல் ஏரியாவுலயும் நம்பர் 1.. ஜெயிலர் 5 நாள் வசூல்!

சென்னை: ஜெயிலர் படம் வெளியான ஐந்து நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகம் முழுவதும் ரூ.350 கோடியை நெருங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த, இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் என இரண்டுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

Superstar Rajinikanth jailer movie crossed Rs 350 crore worldwide

இருவருமே தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு இணைந்ததால், ஜெயிலர் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்துவிட்டது.

ஜெயிலர் கதை: சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல கோவில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு கடத்துகிறது. இதைத் தடுக்கும் போலீஸ் அதிகாரியான வசந்த் ரவியை, சிலை கடத்தல் கும்பலின் தலைவன் கடத்திக் கொல்கிறார். இதனால், ரஜினியின் குடும்பதே உடைந்து போக வசந்த் ரவியின் தந்தையும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான முத்துவேல் பாண்டியன்(ரஜினிகாந்த்) தனது மகனுக்காகப் பழிவாங்கப் புறப்படுகிறார்.

மாஸ் காட்டிய ரஜினி: அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி மாஸ் காட்டி இருக்கிறார் ரஜினி. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன போதும் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பேமிலி ஆடியன்சுக்கும் படம் பிடித்துவிட்டதால், குடும்பத்தோடு திரையரங்குக்கு படையெடுத்து வருகின்றனர்

வசூல் விவரம்: ஜெயிலர் படம் வெளியான முதல் நாள் ரூ 95.78 கோடியும், 2 ஆம் நாள் ரூ 56.24 கோடி, 3 ஆம் நாள் ரூ 68.51 கோடி என உலகளவில் வசூல் செய்து இருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 4 வது நாளில், ரூ 82.36 கோடியும், திங்கட்கிழமையான நேற்று சற்று சரிவை சந்தித்த நிலையில், இந்திய அளவில் ரூ.28 கோடியும், உலக அளவில் 178 கோடியை வசூலித்தது.

Superstar Rajinikanth jailer movie crossed Rs 350 crore worldwide

ரூ.350 கோடி வசூல்: இதுவரை ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடியைத் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சுதந்திர தினம் விடுமுறை என்பதால், பல திரையரங்குகளில் ஜெயிலர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதனால், ஜெயிலர் திரைப்படம் 500 கோடியை விரைவில் தாண்டும் எனவும் பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் சாதனையை முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இங்கே நான் தான் கிங்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸைக் கொளுத்தியது மட்டுமல்லாமல், இங்கே நான் தான் கிங், நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என அவரது ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளார்.மேலும், ஷிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி, தமன்னா என பலர் நடித்துள்ளனர். தமன்னாவின் காவாலா ஆட்டத்திற்கு திரையரங்கில் விசில் பறந்து களைகட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X