Jailer : ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா… ஜெயிலர் படத்தின் மாஸ் போஸ்டர்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புது போஸ்டர் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Superstar Rajinikanth jailer movie new poster out

சூப்பர் ஸ்டார் ரஜினி : ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன், மோகன்லால், சிவராஜ்குமார், சஞ்சய் தத், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் என பலர் நடித்து வருகின்றனர். சென்னை மற்றும் கடலூரில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முத்துவேல் பாண்டியன் : சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தில் கம்பீரமான ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ளார். ஒரு ஜெயிலர் வாழ்க்கையில் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் ஜெயிலர் திரைப்படத்தின் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

Superstar Rajinikanth jailer movie new poster out

மாஸ் லுக் : ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தில் இருந்து புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரஜினி காரை கால்வைத்து திறந்து கொண்டு ஆக்ரோஷமாக இருக்கிறார். சற்று முன் வெளியான இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா என கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் : ரஜினி தற்போது தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடிந்துவிட்டு,ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதன்பின், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்திற்கான போட்டோ ஷூட் பணியை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X