Thalaivar 170: கெத்தா நடந்து வரான்.. கேட்டை எல்லாம் திறந்து வரான்.. தொடங்கியது தலைவர் 170 ஷூட்டிங்!

சென்னை: அக்டோபர் 1ம் தேதி அதிரடியாக தலைவர் 170 படத்தின் டீம் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்த லைகா நிறுவனம் நேற்று வரை அப்டேட் மழை பொழிந்து வந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்கி உள்ளது.

சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேற்றே விமானம் மூலம் கிளம்பிய சூப்பர்ஸ்டார் தலைவர் 170 படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான படமாக உருவாக போகிறது என்றார்.

Superstar Rajinikanth kick starts Thalaivar 170 shooting from today at Thiruvananthapuram

மேலும், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தலைவர் 170 படத்திலும் பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளது ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தலைவர் 170 ஷூட்டிங் ஆரம்பம்: ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தலைவர் 170 படத்தின் சூட்டிங் இன்று முதல் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

Superstar Rajinikanth kick starts Thalaivar 170 shooting from today at Thiruvananthapuram

திருவனந்தபுரத்தில் சூப்பர் ஸ்டார்: தலைவர் 170 படத்தில் பகத் பாசில் மற்றும் மஞ்சுவாரியர் என இரு மலையாள நடிகர்கள் நடித்து வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளை யானை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஹையட் ரெசிடென்சி ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் கெத்தாக உள்ளே நுழையும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

தலைவர் 170 ஆரம்பம்: இன்று காலை முதல் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மிகவும் வலிமையான திரைக்கதையை ஞானவேல் உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

அந்தப் படத்திற்கு மிகப்பெரிய மல்டி ஸ்டார்கள் தேவை என்பதால் தான் அமிதாபச்சன், பகத் பாசில் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.

வயித்தெரிச்சல் விமர்சனம்: ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலேயே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த நிலையில், அதே வெற்றி பார்முலாவை தலைவர் 170 படத்திற்கும் ரஜினிகாந்த் பயன்படுத்தி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

பான் இந்தியா திரைப்படங்களால் உருவாகும் படங்களில் எல்லாமே இந்திய நடிகர்களின் சங்கமும் சமீபகாலமாக நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில் தலைவர் 170 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X