அதிரடியாக தயாராகும் லால்சலாம்..பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு.. வெளியான வீடியோ!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால்,விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
லால் சலாம் : லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி சுமார் 20 நிமிட காட்சியில் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

லைகா நிறுவனம் : இத்திரைப்படம் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சுகந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையத்துள்ளார்.
ஷூட்டிங் நடக்கவில்லை : இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை,சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் தொடங்கியது. மும்பையில் 2 வாரங்கள் ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் வராததால், 5 நாட்களிலேயே மும்பையில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார் ரஜினி.

படப்பிடிப்புத்தள வீடியோ : இதையடுத்து, மீதம் இருக்கும் ரஜினியின் காட்சிகள் சென்னையில் செட் போடப்பட்டு நடக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கெட்டப்பில் நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி உள்ளது. பாண்டிச்சேரியில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மாஸ் காட்டும் ரஜினி : ரஜினிகாந்த் தற்போது, நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர், படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வந்த இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர், ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தபடத்தைத் தொடர்ந்து இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











