'2027' ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டு.. ரஜினி,வைரமுத்து சந்திப்பு!

சென்னை: ஜெயிலர் 2, கமல் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், நேற்று கவிப்பேரரசு வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். அவர்களின் சந்திப்பு குறித்து போட்டோவை வைரமுத்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, சந்திப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைரமுத்து கவிதை நடையில் எழுதி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார். 'பாசமுள்ள மனிதனப்பா - நான் மீசவச்ச குழந்தையப்பா' என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார் வியப்புக்குரிய மனிதர்தான் அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது, உணவு முறை, உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது.

Superstar Rajinikanth Vairamuthu

2027 கொண்டாட்டமான ஆண்டு: எங்கள் நூறு நிமிட உரையாடலை 'கிரீன் டீ' கூடக் கெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம், ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார். 2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக்கொள்ளுங்கள்அவரிடம்முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை 'இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது' என் தமிழ் பொய்யாகவில்லை என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X