எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்த ரஜினிகாந்த்!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
பாஜக மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமான இருக்கிறார் எச்.ராஜா. இவருக்கு வயது 68. இவர் கடந்த வெள்ளிக்கிழமை கிண்டியில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தாா். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ரஜினிகாந்த்: மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தொடர் கண்காணிப்பில் உள்ள அவரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அவர் உறவினர்களுடன் பேசிவருவதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த எச் ராஜாவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதியும் சென்றிருந்தார். இதையடுத்து இன்று ரஜினிகாந்த், எச் ராஜாவை மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் அவரின் கையை பிடித்து எச் ராஜா பேசி உள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











