அமெரிக்காவில் ரஜினி... அவரது அடுத்த பிளான் இது தானா ?

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக, அரசிடம் அனுமதி பெற்று அமெரிக்கா சென்றுள்ளார். வழக்கமான பரிசோதனை என்றாலும், லாக்டவுன் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ரஜினி அமெரிக்கா சென்றுள்ளார்.

ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னை விமாரன நிலையத்திலும், தோஹா விமான நிலையத்திலும் எடுக்கப்பட்ட ரஜினியின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் கடந்த 2 நாட்களாக வைரலாகின.

அமெரிக்காவில் குடும்பத்துடன் தனுஷ்

அமெரிக்காவில் குடும்பத்துடன் தனுஷ்

ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ், ஏற்கனவே அமெரிக்காவில் தான் உள்ளார். ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற தனுஷ், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் அமெரிக்காவில் தான் இருந்து வருகிறார்.

 சில வாரங்கள் ரஜினி ஓய்வு

சில வாரங்கள் ரஜினி ஓய்வு

ரஜினி அமெரிக்கா சென்றவுடன், அவரின் மருத்துவ பரிசோதனைகளுக்கு தனுஷ் உடனிருந்து உதவ உள்ளார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு அடுத்த சில வாரங்களுக்கு குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வெடுக்க போகிறார் ரஜினி. அதற்கு பிறகே அவர்கள் இந்தியா திரும்ப உள்ளனராம்.

அண்ணாத்த வேலைகளை முடித்த ரஜினி

அண்ணாத்த வேலைகளை முடித்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் தான் நடிக்க வேண்டிய பகுதிகள், டப்பிங் வேலைகள் ஆகியவற்றை ரஜினி மே மாதமே முடித்து விட்டார். இதனால் ரஜினி தவிர்த்து மற்றவர்கள் நடிக்க வேண்டிய சீன்கள் மட்டும் விரைவில் படமாக்கப்பட உள்ளது.

தீபாவளிக்கு வரும் அண்ணாத்த

தீபாவளிக்கு வரும் அண்ணாத்த

கொரோனா லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டு, தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் அண்ணாத்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் தென்னிந்தியாவில் பிரபலமான முகங்களான கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தை விரைந்து முடிக்க திட்டம்

படத்தை விரைந்து முடிக்க திட்டம்

கிராமத்து, குடும்ப, பொழுதுபோக்கு படமாக அண்ணாத்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் குஷ்பு தனது பகுதிகளை நடிக்கும் வேலையை துவக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X