கூலி டீசருக்கு வந்த சிக்கல்.. இசையமைப்பாளரும் தயாரிப்பாளருக்குமான பிரச்னை.. ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியார். பகத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Superstar Rajinikanth opens up on ilayaraja copyright issue with coolie Movie teaser

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

லோகேஷ் கனகராஜின் கூலி: அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் வரும், வா வா பக்கம் வா பாடலை மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த டீசர் இணையத்தில் டிரெண்டான நிலையில், கூலி படத்தில் தனது பாடலை உரிய அனுமதி பெறாமலும், ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என்றும், அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நச் பதில்: ஏற்கனவே இளையராஜா வைரமுத்து விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ள நிலையில். மும்பை படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம், கூலி படத்தின் டீசரில் வா வா பக்கம் வா பாடல் பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்னை என நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X