ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர்… மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் படு தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூல் அதிகரித்தது. இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.35 கோடியை வசூலித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், கார்த்திக் நடித்த ஜப்பான் படத்தின் படு தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தது. இப்படம் 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடியை வசூலித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் அறிக்கை: இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு , வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.
சண்டை காட்சிகள் அபாரம்: திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டிற்குரியது. திலீப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

தயாரிப்பாளருக்கு பாராட்டு: இந்தப் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கிறது என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











