10 நாட்கள் முன்பே ஆன்மிக பர்த்டே கொண்டாடிய ரஜினி.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வரவுள்ள நிலையில், நேற்றே அவரது இல்லத்தில் விசேஷ பூஜை ஒன்று போடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்தின் நட்சத்திரம் திருவோணம் என்றும், நேற்று திருவோணம் நட்சத்திரம் என்பதால், ராசிப்படி நேற்று பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரஜினி தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.
2021ல் அற்புதம் நிகழும் என சூப்பர்ஸ்டார் கூறியுள்ள நிலையில், அதற்கான பூஜையா என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூப்பர்ஸ்டார் 69
1950ம் ஆண்டில் சிவாஜி ராவ் கெய்க்வாடாக பிறந்து, கண்டக்டராக பணிபுரிந்து, வில்லனாக அறிமுகமாகி சூப்பர்ஸ்டார் ரஜினியாக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை, கலர் படம், அனிமேஷன், 3டி என அத்தனை தளங்களிலும் இந்த எந்திரன் கால்பதித்துள்ளார். 69 வயது நிறைவடைந்து 70வது வயதில் காலடி எடுத்து வைத்தாலும் இந்த குதிரை ஓடிக்கிட்டுத்தான் இருக்கிறது, இன்னமும் ஓடும்.

தர்பார்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அரசியல் படமாக இல்லாமல், போலீஸ் படமாக உருவாகி வரும் இந்த தர்பார் படத்தில் மறைமுக அரசியல் வாசம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான சும்மா கிழி பாடல் மிகப்பெரிய ரெக்கார்டு பிரேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த மனசு
கேரள மாற்றுத்திறனாளி இளைஞர் பிரனவின் நீண்ட நாள் ஆசையை, ரஜினிகாந்த் நிறைவேற்றி வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மனசு தான் கடவுள் என பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆன்மிக பர்த்டே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வரவுள்ள நிலையில், நேற்றே அவரது இல்லத்தில், பூஜை போட்டு ராசி ரீதியான பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதாக தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.
தலைவர் திருவிழா
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து பட்டு புடவை உடுத்தி சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்ற ரசிகர்கள், டிசம்பர் 1 முதல் டிசம்பர் 12 வரை தலைவர் திருவிழாவாக கொண்டாட உள்ளனர்.


Click it and Unblock the Notifications











