அண்ணாத்த ஃபஸ்ட்லுக் எப்போது...அசத்தல் அப்டேட் வெளியீடு
சென்னை : ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கு முன் ஹிட்டான ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது.
அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட டாப் நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த
கடந்த ஆண்டு இறுதியில் ஐதராபாத்தில் படத்தின் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனால் படத்தை 2021 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, படக்குழு சென்னை திரும்பியது.

எதிர்பார்ப்பை தூண்டும் படக்குழு
அதற்கு பிறகு ரஜினியின் உடல்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் தள்ளி போய் கொண்டிருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க படக்குழுவினர் 2 நாட்களுக்கு முன் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியில் ஸ்டில் ஒன்றை வெளியிட்டனர்.

படக்குழு வெளியிட்ட ஃபோட்டோ
டைரக்டர் சிவாவுடன் ரஜினி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது போன்ற இந்த ஃபோட்டோவை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கினர். இந்த ஃபோட்டோ ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ரஜினியின் ஃபஸ்ட்லுக் எப்போது
லேட்டஸ்ட் தகவலின்படி மே 10 ம் தேதியுடன் அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடியும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஜினியின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை ஜுன் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











