இதுதான் ரஜினியோட மாஸ்.. 2 நாட்களில் 100 கோடியை கடந்த அண்ணாத்த.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டர ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெறும் 2 நாட்களிலேயே உலகளவில் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக திரையரங்குகளில் வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க மக்கள் திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எக்ஸ்ட்ரா சேர்களுடன் அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருகிறது.

அண்ணாத்த அவுட்
விமர்சன ரீதியாக ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் இந்த தீபாவளி ரேசில் மொத்தமாக அவுட்டாகி உள்ளது. அண்ணன் தங்கை சென்டிமென்ட் திரைக்கதையை இயக்குநர் சிவா முடிந்த வரை படு சொதப்பலாக எடுத்துள்ளார் எனவும் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்காக
70 வயதிலும் இந்த அளவுக்கு எனர்ஜியுடன் நடிகர் ரஜினிகாந்த் திரையில் எப்படி மிரட்டுகிறார் என்பதை காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தீபாவளி வாரம் முழுக்க திரையரங்க டிக்கெட்டுகளை வாங்கி குவித்து குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று அண்ணாத்த படத்தை பார்த்து வருகின்றனர்.

100 கோடி வசூல்
அண்ணாத்த திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களின் வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கி விட்டு இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை அள்ளி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

உலகளவில்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் முதல் நாளில் உலக அளவில் 70.19 கோடிகளை வசூலித்திருப்பதாகவும் 2வது நாளில் 42.63 கோடிகள் வசூலித்து முதல் இரு நாட்களிலேயே மொத்தம் 112.82 கோடிகளை வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருப்பதாக கூறுகின்றனர். தமிழ் நாட்டில் இரு நாட்களில் 62 கோடிகளை கடந்திருப்பதாக கூறுகின்றனர். இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் முழுவதும் அரங்கம் நிறைந்து இருப்பதால் தமிழ்நாட்டிலும் முதல் வாரத்திலேயே 100 கோடியை அண்ணாத்த படம் எளிதில் கடக்கும் என்கின்றனர்.

ரஜினியின் மாஸ்
தர்பார் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படமும் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அண்ணாத்த படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற வில்லை என்றாலும், வசூல் ரீதியாக இப்படியொரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றதற்கு காரணம் ரஜினியின் மாஸ் தான் என்று சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் விமர்சனங்களை புறக்கணித்து விட்டு தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











