ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு வந்த புது பிரச்சனை.. எக்ஸ் மனைவிக்கு செக் வைக்கும் தனுஷ்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஐஸ்வர்யாவுக்கு புது பிரச்சனை வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பிறகு பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியிட்டு இருந்தார்.
தற்போது இவர், கிரிக்கெட் விளையாட்டை வைத்து உருவாகி வரும், லால் சலாம் என்ற படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு பூஜை போடப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுசை வைத்து 'த்ரி' என்ற படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான காதல் கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு சிறப்பாகவே இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. 'த்ரி' படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியை வைத்து வை ராஜா வை இயக்கி இருந்தார்.

லால் சலாம்
8 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். அண்மையில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

ஆடை வடிவமைப்பாளர் விலகினார்
கடந்த மாதம் லால் சலாம் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி விலகுவதாக தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அதில், பிரீ ப்ரொடெக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இனிஇணைந்து வேலை செய்யப் போவதில்லை அதிரடியாக பதிவிட்டு இருந்தார். படம் ஆரம்பிக்கும் போதே இவ்வாறு பிரச்சனையான ரசிகர்களை வருத்தமடைந்தனர்.

தனுஷின் பிளான்
இதையடுத்து, லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் இப்படி ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தனுஷ், நான் அடுத்து இயக்க உள்ள படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலையாரும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தமிழ்சினிமாவில் இது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











