ரஜினிக்கு நடிப்பு சொல்லி கொடுத்த நாராயணசாமி உயிரிழந்தார்.. குருவுக்கு அஞ்சலி செலுத்திய சிஷ்யன்!
சென்னை: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்த் அஞ்சலி: இந்நிலையில், கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. அவரது உடல் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில்,நடிகர் ரஜினிகாந்த், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications











